மெத் பெத்தேமைன்ட் எனும் தடைசெய்யப்பட்ட போதைப் பொருளுடன் ஈரானியர்கள் இருவர் இன்று காலை கட்டாரிலிருந்து இலங்கை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நபர்களின் பயணப் பொதிகளிலிருந்து 1.8 கிலோகிராம் மெத் பெத்தேமைன்ட் எனப்படும் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சுங்க கட்டுப்பாட்டுப் பிரிவின் அத்தியட்சகர் நிஹால் அழகப்பெரும குறிப்பிட்டுள்ளார்.
44 மற்றும் 28 வயதான இவ்விரு சந்தேக நபர்களும் கடந்த ஜூன் 20 இற்கும் 22 இற்கும் இடையில் இலங்கையில் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கண்டியில் நடைபெறவுள்ள எஹல பெரஹரவில் கலந்துகொள்ளும் வெளிநாட்டவர்களுக்கு விநியோகிப்பதற்காக இப்போதைப்பொருள் கொண்டுவரப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.