கொல்லப்பட்ட தமிழ் ஊடகர்கள் சகலரும் புலி உறுப்பினர்களே லங்காதீப ஆசிரியர் ஆரியநந்த கூறுகிறார்
[Wednesday, 01/08/2012 06:38 AM]
தழிழீழ விடுதலைப் புலிகளும் தமது உறுப்பினர்களை தமிழ் ஊடகங்களில் பணியாற்ற அனுப்பினார்கள். அந்த உறுப்பினர்களே தழிழ் ஊடகவியலாளர்களே சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்கள்
கடந்த காலங்களில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் அனைவரும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்களே.
இவ்வாறு தனது கருத்தை வெளியிட்டுள்ளார் சிங்கள வாரப் பத்திரிகையான லங்காதீப பிரதம ஆசிரியர் ஆரியநந்த தும்ப விகாவத்த. வடமேல் மாகாண ஊடகவியலாளர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு கடந்த சனிக்கிழனம குருநாகலிலுள்ள இளைஞர் சேவைகள் மன்ற மண்டபத்தில் இடம் பெற்றது.
இந்த நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது
இன்றைய சூழலில் போதைவஸ்து வியாபாரம் செய்பவர்கள் தாராளமாகப் பத்திரிகைகளைப் புதிதாக ஆரம்பித்து நடத்தி வருகின்றார்கள். இதே போலவே அன்றைய சூழலிலும் தழிழீழ விடுதலைப் புலிகளும் தமது உறுப்பினர்களை தமிழ் ஊடகங்களில் பணியாற்ற அனுப்பினார்கள். அந்த உறுப்பினர்களே தழிழ் ஊடகவியலாளர்களே சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்கள் என்றார்.
வடமேல் மாகாண ஆளுநர் திஸ்ஸ ஆர் பழல்ல இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு வடமேல் மாகாண ஊடகவியலாளர்களுக்கு விருது வழங்கிக் கௌரவித்தார்.