இந்திய மீனவர்களினால் யுத்தினால் பாதிக்கப்பட்டு வாழ்வதாரங்களை இழந்துள்ள எமது மீனவர்கள் மேலும் பாதிக்கப்படுகின்றனர். எமது மீனவர்களின் குடும்பங்கள் விரைவில் நடுத்தெருவிற்கு வரும் நிலை ஏற்படவுள்ளது.
இந்திய றோலர்களினால் எமது வளங்கள் முழயைமாக அழிக்கப்படவுள்ளன. இந்திய அரசோ, தமிழ் நாட்டு அரசோ இது தொடர்பாக இந்திய மக்களுக்கு அறிவூட்டல்களை வழங்கியதாக இல்லை.
எனவே எமது இப்பிரச்சினை தொடர்பாக இம்மாநாட்டில் கலந்துரையாடப்பட்டு ஒரு தீர்வு எட்டப்பட வேண்டும். இதற்காக இந்திய ஊடகங்கள் மூலம் இச்செய்தியை இந்திய மக்களுக்கு கொண்டு செல்ல நாம் திட்டமிட்டுள்ளோம் என்றார்.